×

சந்தன மரம் கடத்த முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

நெல்லை, மே 21: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடையம் பீட் வெளி மண்டல பகுதி ராமநதி அணை அருகில் காய்ந்து விழுந்து கிடந்த சந்தன மரத்தை எடுத்துச் செல்வதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து கடையை வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஆசீர்வாதபுரம் பகுதியை சேர்ந்த லிங்கம் மகன் வெள்ளத்துரை என்பவர் சந்தன மரத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. அவரை கையும் களவுமாக வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி வெள்ளத்துரைக்கு ரூ.25 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

The post சந்தன மரம் கடத்த முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kalakadu Mundanthurai Tiger Reserve ,Kadayam Peet ,Ramanadi ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு